ரெடியாகிறது ‘இது நம்ம ஆளு’ டீஸர்!

ரெடியாகிறது ‘இது நம்ம ஆளு’ டீஸர்!

செய்திகள் 31-May-2014 4:03 PM IST VRC கருத்துக்கள்

’பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு வேகம் பிடித்துள்ளது. சமீபத்தில் சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படமாக்கிய பாண்டிராஜ், அதே வேகத்துடன் அந்த காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளையும் செய்து வருகிறார். இப்படி படப்பிடிப்பு முடிந்த உடனேயே அது சம்பந்தமான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் ஸ்பீடாக செய்து வரும் பாண்டிராஜ், விரைவில் இப்படத்தின் டீஸரை வெளியிட இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு முதன் முதலாக நடிக்கும் இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பதும் இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;