சர்ச்சையை கிளப்பியுள்ள மல்லிகா ஷெராவத் படம்!

சர்ச்சையை கிளப்பியுள்ள மல்லிகா ஷெராவத் படம்!

செய்திகள் 31-May-2014 1:12 PM IST VRC கருத்துக்கள்

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்! கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’, சிம்புவுடன் ’ஒஸ்தி’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார். சர்ச்சையை கிளப்பும் விதமாக பல கேரக்டர்களில் நடித்துள்ள இவர் தற்போது நடிக்கும் ‘டெர்ட்டி பாலிடிக்ஸ்’ என்ற ஹிந்திப் படமும் சர்ச்சைக்குள்ளாகும் போல! இப்படத்திற்காக அவர் கொடுத்திருக்கும் ஒரு சூப்பர் போஸை பாருங்கள்! அரை நிர்வாண உடம்பில், இந்திய தேசியக் கொடியை நினைவூட்டுவது மாதிரியான ஒரு ஆடை, கையில் ஒரு சிடி என அவர் உட்காந்திருப்பது பெரிய பதவியில் இருக்கும் ‘விஐபி’க்கள் பயணம் செய்யும் சிவப்பு விளக்கு பொருத்திய ஒரு கார் மீது! மல்லிகாவின் இந்த போஸ் தான் பாலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக்!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த பன்வாரி தேவி பாலியல் கொடுமை சம்பவத்தை வைத்து எடுக்கப்படும் படமாம் இது! இதில் பன்வாரி தேவியின் கேரக்டரில் மல்லிகா ஷெராவத் நடிக்க, இவருடன் ஓம்புரி, நஸ்ருதீன் ஷா, அனுபம்கேர், ஜாக்கி ஷெராஃப் முதலானோரும் நடிக்கிறார்கள்! இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் கே.சி.பொக்காடிய குறும்போது, ‘‘ஜோத்பூரில் நடந்த அந்த சோக சம்பவத்தை பின்னணியாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஆனால் இப்படத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலோ, ஏதாவது அரசியல் கட்சியை, அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கும் விதமாகவோ எந்த காட்சிகளும் இருக்காது’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;