இன்று நடிகர் கிருஷ்ணா பிறந்த நாள்!

இன்று நடிகர் கிருஷ்ணா பிறந்த நாள்!

செய்திகள் 31-May-2014 12:02 PM IST VRC கருத்துக்கள்

ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் கிருஷ்ணா! 1965-லிருந்து நடிக்க துவங்கிய இவர் கிட்டத்தட்ட 350 படங்களில் நடித்துள்ளார். சுசி கணேசன் இயக்கத்தில் 2009-ல் வெளியான ‘கந்தசாமி’ படம் தான் இவர் தமிழில் கடைசியாக நடித்த படம்! ஆந்திர அரசின் நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு, 2009-ல் மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, தெலுங்கு சினிமாவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் போன்ற பல ஜாம்பவான்களின் காலகட்டத்தில் சிறந்து விளங்கிய நடிகர்களில் கிருஷணாவும் ஒருவர்! இவரை தொடர்ந்து இவரது வாரிசான மகேஷ் பாபுவும் இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக பிரகாசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, தன் தந்தையின் பிறந்த நாளில் தான் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியிடுவது மகேஷ் பாபுவின் வழக்கம்! அதை இந்த வருடமும் கடை பிடிக்கும் வகையில் தனது ‘ஆகடு’ படத்தின் டீஸரை இன்று வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு! இன்று மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாள்! இந்நாளில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;