ஜெய்யுடன் நயன், ஹன்சிகா உட்பட 9 நாயகிகள்?

ஜெய்யுடன் நயன், ஹன்சிகா உட்பட 9 நாயகிகள்?

செய்திகள் 31-May-2014 11:11 AM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் ’வாலு’ படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருப்பதாகவும், இப்படம் விரைவில் ரிலீசாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விஜயசந்தர், அடுத்து வித்தியாசமான ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘கன்னி ராசி’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க, அவருடன் 9 கதாநாயகிகள் நடிக்கிறார்களாம்! இந்த கதாநாயகிகளில் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, த்ரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா முதலானோர் முக்கிய இடம் வகிக்க, ’வாலு’ பட ஹீரோ சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறதாம். பாண்டியராஜன் இயக்கத்தில், பிரபு கதாநாயகனாக நடித்து ‘கன்னி ராசி’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் 1985-ல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;