கத்தி டு ரப்பாஸ் – சமந்தா!

கத்தி டு ரப்பாஸ் – சமந்தா!

செய்திகள் 31-May-2014 2:43 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகம் பிடித்துள்ளது. விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் அல்லவா! கடந்த சில நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து சில நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இன்றுடன் முடிவடையும் படப்பிடிப்பு குறித்து படத்தின் ஹீரோயின் சமந்தா, "இன்றுடன் ‘கத்தி’ படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிகிறது. ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் ‘ரப்பாஸ்’ தெலுங்கு படத்தில் நடிக்க ஹைதராபாத் செல்கிறேன்’’ என்று தனது மைக்ரோ ப்ளாக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;