மோனிகா திடீர் மதம் மாற்றம்!

மோனிகா திடீர் மதம் மாற்றம்!

செய்திகள் 30-May-2014 4:47 PM IST VRC கருத்துக்கள்

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து மற்றுமொரு திரையுலக பிரபலம் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்! அவர் வேறு யாருமல்ல, பாக்யராஜ் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு சுஹாசினி மணிரத்னம் இயக்கிய ‘இந்திரா’, மற்றும் ‘சக்கரை தேவன்’, ‘என் ஆசை மச்சான்’ என பல படங்களில் நடித்து, பிறகு ‘அழகி’, ‘சிலந்தி’ உட்பட ஏராளமான படங்களில் ஹீரோயினாகவும் நடித்த மோனிகா தான்! தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஏராளமான தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதை அவரே அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார். அவரது தற்போதைய பெயர் ரஹிமா! இவரது தந்தை இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும், தாய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;