மீண்டும் மெகா ஸ்டார் படத்தில் லட்சுமி ராய்!

மீண்டும் மெகா ஸ்டார் படத்தில் லட்சுமி ராய்!

செய்திகள் 30-May-2014 3:41 PM IST VRC கருத்துக்கள்

லட்சுமி ராய் நடித்து அடுத்து ரிலீசாகவிருக்கிற தமிழ் படங்கள் சுந்தர்.சி. இயக்கியுள்ள ‘அரண்மனை’ மற்றும் அதர்வா நடிக்கும் ‘இரும்புக்குதிரை’. இந்தப் படங்களை தொடர்ந்து 'ராஜாதி ராஜா' என்ற மலையாள படத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் லட்சுமி ராய். ஏற்கெனவே ‘அண்ணன் தம்பி’, ‘சட்டம்பி நாடு’ ஆகிய படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள லட்சுமி ராய், மோகன்லால், திலீப், முகேஷ் உட்பட மலையாளத்தின் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக விளங்கி வருபவர். இதில், சென்டிமென்டான ஒரு விஷயம் என்னவென்றால், லட்சுமிராய் நடித்த பெரும்பாலான மலையாள படங்களும் வெற்றிப் படங்கள்! இதனால், மலையாள சினிமாவை பொறுத்தவரையில் லட்சுமி ராய், ஒரு ராசியான நடிகை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;