ஸ்ருதிஹாசனுடன் காதலா? - சுரேஷ் ரெய்னா விளக்கம்

ஸ்ருதிஹாசனுடன் காதலா? - சுரேஷ் ரெய்னா விளக்கம்

செய்திகள் 30-May-2014 1:54 PM IST Chandru கருத்துக்கள்

தற்போது இணையதளங்களில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு செய்தி, ‘சுரேஷ் ரெய்னாவுடனான காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன்’ என்பதுதான். ஆனால், இதுகுறித்து ஸ்ருதிஹாசனுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலோ, ஃபேஸ்புக் பக்கத்திலே எந்தவிதமான கருத்தையும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. நீண்டநாட்களாக இந்த ‘கிசு கிசு’வை மீடியாக்களில் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த செய்தி தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. யார் இதைக் கிளப்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், பிரபல ஆங்கில நாளிதழ்களின் வெப்சைட்கள் பலவற்றிலும் இந்த செய்தி மீண்டும் பதிவேறியிருக்கிறது.

இந்த செய்தி ஸ்ருதி காதுக்கு எட்டியதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால், செய்தியின் வீரியத்தைப் புரிந்துகொண்ட சுரேஷ் ரெய்னா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘‘யாரும் இதுவரை உறுதியாக எந்த விஷயத்தையும் சொல்லாதபோது, அதை உறுதியாகச் சொல்லிவிட்டதாக மீடியாக்கள் செய்தி பரப்பி வருகின்றன. ஆனால், நான் தெளிவாகச் சொல்கிறேன்... நான் யாருடனும் ‘டேட்டிங்’ வைத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை!’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Suresh Raina @ImRaina

Too many media reports which no one even tries to confirm. This is to clear once & for all. I'm not dating ANYONE

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;