அஜித் படப்பிடிப்பை நிறுத்திய போலீஸ்?

அஜித் படப்பிடிப்பை நிறுத்திய போலீஸ்?

செய்திகள் 30-May-2014 12:08 PM IST VRC கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக சென்னை அடுத்த பாலவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற்காக ரோட்டில் நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் ரோட்டில் விளக்குகள் அமைத்தும், வாகனங்களை இரைச்சலுடன் இயக்கியும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதிக வெளிச்சம் மற்றும் வாகனங்களின் கடும் இரைச்சலால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது, அது அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு என்றும், அந்த படப்பிடிப்புக்கு அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதையும் கண்டு பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் படப்பிடிப்பை நிறுத்தினர்! அரசாங்கத்திடம் முறையான அனுமதி பெறாமலும், பொதுமக்களுக்கு இடைஞ்சலான வகையிலும் அங்கு படப்பிடிப்பை நடத்தியதற்காக படப்பிடிப்பு மேலாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;