ஜூன் 2வது வாரத்தில் ‘அஞ்சான்’ தரிசனம்!

Anjaan treat from 2nd week of June

செய்திகள் 30-May-2014 11:42 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘அஞ்சான்’ படத்தின் ‘டைட்டில் லுக்’கிற்கு ரசிகர்களிடத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் ‘மாஸ்’ காட்டும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை எப்போது பார்ப்போம் என சூர்யா ரசிகர்கள் தற்போது ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் மனம் திறந்திருக்கிறார் தயாரிப்பாளர் ‘யுடிவி’ தனஞ்செயன். ‘‘அஞ்சான் படத்தின் டீஸர் இன்னும் ஒரு வாரத்திற்குள் ரெடியாகிவிடும்’’ என இயக்குனர் லிங்குசாமி தன்னிடம் தெரிவித்திருப்பதாக தனஞ்செயன் தனது மைக்ரோ பிளாக்கிங் பேஜ்ஜில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, படத்தின் டீஸர் ஜூன் முதல் வாரத்தில் ரெடியாகிவிடும் எனவும், 2வது வாரத்தில் டீஸரை வெளியிட இருப்பதாகவும் நம்பத்தகுந்தவர்களிடத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. எனவே சூர்யா ரசிகர்கள் ‘அஞ்சான்’ தரிசனத்தைக் காணத் தயாராகுங்கள்.

சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா முதல் முறையாக நடித்திருக்கும் இப்படத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;