ஜெய் படத்திற்கு வந்த ‘விஸ்வரூப’ பிரச்சனை!

ஜெய் படத்திற்கு வந்த ‘விஸ்வரூப’ பிரச்சனை!

செய்திகள் 30-May-2014 11:11 AM IST Chandru கருத்துக்கள்

படம் வெளியாகி முதல் காட்சி வெற்றிகரமாக ஓடி முடித்தால்தான் அந்தப் படம் ரிலீஸான சந்தோஷம் தயாரிப்பாளர்களுக்கு வரும் என்ற மோசமான ஒரு சூழ்நிலை தமிழ்சினிமாவில் தற்போது நிலவி வருகிறது. படம் ரிசர்வேஷன் ஆரம்பித்து முதல் காட்சிக்கு முன்பு நிறுத்தப்பட்ட பல படங்களை இதற்கு உதாரணம் கூறலாம். சமீபத்தில் கூட ரிசர்வேஷன்கள் முடிந்த நிலையில் ‘கோச்சடையான்’ படத்தின் ரிலீஸை கடைசி நேரத்தில் மாற்றி அமைத்தார்கள். அதற்கு முன்பு ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படமும் இதே போன்றதொரு சூழநிலையைச் சந்தித்தது. ஆனால், இந்தப் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு ‘டெக்னிக்கல்’ விஷயத்திற்காக தள்ளிப்போடப்பட்டவை. ஆனால், ‘விஸ்வரூபம்’, ‘தலைவா’ போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதற்கு வேறு வகையான காரணங்கள் இருந்ததை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். அப்படி ஒரு பிரச்சனைதான் தற்போது ஜெய், நஸ்ரியா நடித்திருக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்திற்கு வந்திருக்கிறது.

இப்படத்தில் தங்களது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி, படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், படத்தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திட்டமிட்டபடி ரிலீஸாவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;