‘வடகறி’ எப்போது? - தயாநிதி

‘வடகறி’ எப்போது? - தயாநிதி

செய்திகள் 30-May-2014 11:01 AM IST VRC கருத்துக்கள்

‘மீகா என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்துள்ள ‘வடகறி’யை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஜெய், ஸ்வாதி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த சரவண ராஜன் இயக்கியுள்ளார். ரொமான்டிக் ஆக்‌ஷன் என்டர்டெய்ன்மென்ட் படமாக அமைந்துள்ள இப்படத்தில் ஹைலைட்டாக பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார். மொத்த கோலிவுட்டே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘வடகறி’ எப்போது ரிலீஸ்? என்ற கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி பதிலளிக்கும்போது, ‘வடகறி கண்டிப்பாக ஜூன் மாதம் வெளியாகும். படத்தின் ரிலீஸ் தேதியை நீங்கள் விரைவிலேயே எதிர்பார்க்கலாம்’’ என்று கூறியுள்ளார். ஆக, ‘வடகறி’யை ர(ரு)சிக்க ரெடியாக இருங்க ரசிகர்களே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;