அமிதாப் - தனுஷ் படத்தின் டைட்டில்?

அமிதாப் - தனுஷ் படத்தின் டைட்டில்?

செய்திகள் 30-May-2014 10:47 AM IST Chandru கருத்துக்கள்

‘ரான்ஜ்னா’வின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர், ‘சீனி கம்’, ‘பா’ புகழ் பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து தனது இரண்டாவது ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். உலகநாயகனின் முதல் மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் இணைந்த தனுஷ், இப்படத்தில் அவரின் இரண்டாவது மகள் அக்ஷராவை தனக்கு ஜோடிக்கியிருக்கிறார். பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

பல காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டபோதும்கூட இதுவரை இப்படத்திற்கு ‘டைட்டில்’ வைக்காமலேயே இருந்தனர். ஆனால், தற்போது இப்படத்திற்கு ‘ஷமிதாப்’ என பெயர் வைத்திருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;