100 நாள் பிளான்… 50 அடித்த விஷால்!

100 நாள் பிளான்… 50 அடித்த விஷால்!

செய்திகள் 30-May-2014 10:30 AM IST VRC கருத்துக்கள்

இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தேதியை நிர்ணயம் செய்து படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது எளிதான காரியம் இல்லை! ஆனால் விஷால் தனது ‘நான் சிகப்பு’ மனிதன் படம் மூலம் அதை சாதித்து காட்டியுள்ளார். இப்படத்தின் ஆரம்ப நிலையிலேயே, 100 நாட்களில் ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற பிளானோடு துவங்கப்பட்ட இப்படத்தை, விஷால் திட்டமிட்ட படியே குறித்த நாளில் ரிலீஸ் செய்தார் திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து, விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘நான் சிகப்பு மனிதன்’ வெளியாகி இன்று 50- ஆவது நாளை எட்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ‘பாண்டிய நாடு’ படத்தை தொடர்ந்து ‘சான் சிகப்பு மனிதன்’ படமும் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் டபுள் மகிழ்ச்சியில் இருக்கிறார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;