ரஜினி, கமலின் ஆஸ்தான இயக்குனருக்கு பிறந்த நாள்!

ரஜினி, கமலின் ஆஸ்தான இயக்குனருக்கு பிறந்த நாள்!

செய்திகள் 30-May-2014 10:07 AM IST Top 10 கருத்துக்கள்

‘முத்து’, ‘படையப்பா’ படங்களை தொடர்ந்து ரஜினியை வைத்து இப்போது ‘லிங்கா’ எனும் மாபெரும் படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். சமீபத்தில் உலகம் முழுக்க பெரும், எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் வெற்றியிலும் இவரது பங்களிப்பு முக்கிய இடத்தை வகிக்கிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, விஜய், அஜித், சிம்பு உட்பட தமிழின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களை இயக்கி, தமிழ் சினிமாவில் வெற்றிப் பட இயக்குனராக திகழும் கே.எஸ்.ரவிக்குமார் பிறந்த நாள் இன்று! ‘கோச்சடையானி’ன் வெற்றி, மீண்டும் ரஜினி எனும் மாபெரும் நட்சத்திரத்தை இயக்கும் மகிழ்ச்சி என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;