‘டிடி வித் ஸ்ரீகாந்த்’ - டும் டும் டும்!

‘டிடி வித் ஸ்ரீகாந்த்’ - டும் டும் டும்!

செய்திகள் 30-May-2014 10:08 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழில் உள்ள பிரபல வி.ஜே.க்களின் பட்டியலை தயார் செய்தால், அதில் ‘டிடி’க்கு கண்டிப்பாக முன்வரிசையில் இடம் கொடுத்தாக வேண்டும். அந்த அளவுக்கு சின்னத்திரை உலகில் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், ‘டிடி’க்கு பெரிய புகழைப் பெற்றுத்தந்தது என்னவோ விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் ஒன்’ ரியாலிட்டி ஷோதான். அந்த நிகழ்ச்சியில் இவரும் தீபக்கும் இணைந்து அமைத்த கூட்டணிக்கு செம ரெஸ்பான்ஸ். அதுமட்டுமில்லாமல் தற்போது காஃபி கொடுத்தே எல்லா பிரபலங்களிடம் இருந்தும் பதில்களை லாவகமாக வாங்குவதில் ‘காஃபி வித் டிடி’ புகழ் திவ்யதர்ஷினிக்கு நிகராக வேறு யாரும் கிடையாது.

பல வருடங்களாக அப்படியே இருக்கும் ‘மார்கண்டேயினி’ டிடிக்கு இப்போ ‘டும் டும் டும்’ கொட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு. தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த்தை பெற்றோரின் முழு சம்மதத்துடன் கரம் பிடிக்கிறார் அம்மணி. இவர்களின் திருமணம் வரும் ஜூன் 28ஆம் தேதி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

திவ்யதர்ஷினிக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை ‘டாப் 10 சினிமா’ சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;