ரஜினிக்கு 5 லட்சம், கோச்சடையானுக்கு 1 லட்சம்!

ரஜினிக்கு 5 லட்சம், கோச்சடையானுக்கு 1 லட்சம்!

செய்திகள் 29-May-2014 5:31 PM IST Chandru கருத்துக்கள்

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கைத் துவங்கி ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வது தற்போது கோலிவுட் பிரபலங்களிடையே பரவலாக பெருகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர்கள் விஜய், தனுஷ், இசையமைப்பாளர்கள் இளையராஜா, டி.இமான், அனிருத் உட்பட பலர் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்கைத் துவங்கினர். அதேபோல், ட்விட்டரிலும் ஏற்கெனவே பல பிரபலங்கள் தங்களுக்கென அதிகாரப்பூர்வ கணக்கைத் துவங்கி, தினமும் தங்களது கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கைத் துவங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, கணக்குத் துவங்கிய முதல்நாளே இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து சாதனை செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது ரஜினியைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல், ‘கோச்சடையான்’ படத்திற்காக உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கையும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;