‘கஜினி’க்கு பிறகு ‘அனேகனி’ல் நிகழ்ந்த மேஜிக்!

‘கஜினி’க்கு பிறகு ‘அனேகனி’ல் நிகழ்ந்த மேஜிக்!

செய்திகள் 29-May-2014 4:11 PM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கிய முதல் படமான ‘கனாகண்டேன்’ படத்திற்கு இசை அமைத்தவர் வித்யாசாகர். இந்தப் படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர்! தற்போது கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘அனேகன்’ படத்திற்கும் இசை அமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்திற்காக சங்கர் மகாதேவன் குரலில் ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் ‘ட்வீட்’டியிருப்பதில், “இப்போதுதான் ‘அனேகன்’ படத்திற்காக சங்கர் மகாதேவன் குரலில் ஒரு பாடலை பதிவு செய்தேன். எனது இசையில் அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது! இப்போதும் அவருடைய குரல் ஃப்ரெஷ்ஷாக, எனர்ஜெட்டிக்காக இருக்கிறது’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சங்கர் மகாதேவன் கடைசியாக பாடிய பாடல் 2005-ல் வெளியான ‘கஜினி’ படத்தில் இடம் பெற்ற ‘ரங்கோலா… ரங்கோலா…’ பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;