குதிரை சவாரி பயிற்சி பெறும் பியா!

குதிரை சவாரி பயிற்சி பெறும் பியா!

செய்திகள் 29-May-2014 11:05 AM IST Top 10 கருத்துக்கள்

நடிகை பியா ஏற்கெனவே பைக் ஓட்டுவதிலும், கிக் பாக்சிங்கிலும் பயிற்சி பெற்றவர்! ஒரு மலையாள படத்தில் நடித்தப்போதுதான் பியாவுக்கு இதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்ததாம்! பைக் ஓட்டுவது, கிக் பாக்சிங்கை தொடர்ந்து, பியா இப்போது குதிரை சாவாரியும் கற்று வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் ஹார்ஸ் ரைடிங் கற்று வருவது எந்தப் படத்திற்காகவும் இல்லை! ஒரு நடிகையை பொறுத்தவரையில் இதுபோன்ற பயிற்சிகள் பெறுவது அவர்களது கேரியருக்கு மிகவும் உதவும். இதை நான் நடித்த சில படங்களின் மூலம் உணர்ந்தேன். அதன் விளைவே இந்த பயிற்சி எல்லாம்’’ என்கிறார்! பியா தற்போது தமிழில் நடிக்கும் படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’. இப்படத்தை ‘ஆரோகணம்’ படத்தை இயக்கியவரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;