விரைவில் ‘காவியத்தலைவன்’! - சித்தார்த் ஸ்டேட்டஸ்

விரைவில் ‘காவியத்தலைவன்’! - சித்தார்த் ஸ்டேட்டஸ்

செய்திகள் 29-May-2014 10:30 AM IST Chandru கருத்துக்கள்

படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கும் இயக்குனர் வசந்தபாலன் இந்த முறை ‘காவியத்தலைவன்’ படத்திற்காகத் தேர்ந்தெடுத்திருப்பது பாரம்பரியமிக்க ‘தெருக்கூத்து’க் கலையை! சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதுபோல் உருவாகி வரும் இப்படத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் 20 அற்புதமான பாடல்களை உருவாக்கியிருக்கிறாராம். ‘ஒய்நாட் ஸ்டியோஸ்’ சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார் சித்தார்த். தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது ‘காவியத்தலைவன்’ டீம்! இதனால், படத்தின் ஆடியோ வெளியீடு, ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;