100 ஏக்கர் நிலத்தில் அனேகன்!

100 ஏக்கர் நிலத்தில் அனேகன்!

செய்திகள் 29-May-2014 10:24 AM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும், ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. ஏற்கெனவெ மூன்று பாடல்களை படம் பிடித்துள்ள நிலையில் இன்னும் இரண்டு பாடல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை படம் பிடித்தால் மொத்த படமும் முடிந்து விடுமாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சியை புதுச்சேரி அருகே அமைந்துள்ள 100 ஏக்கர் விவசாய நிலத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இந்த படப்பிடிப்பு ஜூன் 2-ஆம் தேதி முதல் துவங்கி கிட்டத்தட்ட 15 நாட்கள் நடக்கவிருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் தனுஷ், ஆமிரா, முகேஷ் திவாரி, ஆஷிஷ் வித்யார்த்தி முதலானோர் பங்கேற்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் இன்னொரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக தனுஷ், ஆமிரா மற்றும் படக் குழுவினர் ஸ்காட்லாந்து பறக்கவிருக்கின்றனர். இத்துடன் ’அனேகனி’ன் படப்பிடிப்பு முடிந்துவிடுமாம். ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜே இசை அமைப்பாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - டீசர்


;