‘உலகநாயகன்’ கமலை அழ வைத்த படம்!

‘உலகநாயகன்’ கமலை அழ வைத்த படம்!

செய்திகள் 29-May-2014 10:18 AM IST Chandru கருத்துக்கள்

மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையோடு சமீபத்தில் வெளிவந்து தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் ‘மனம்’. அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நேற்று சிறப்புக்காட்சியாக ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பார்த்து ரசித்தார். படம் பற்றி அவர் கூறும்போது,

‘‘திரையில் அவர்கள் சிரிக்கும்போதெல்லாம், நாகேஸ்வர ராவுடனான எனது நினைவலைகள் ஞாபகத்திற்கு வந்து என்னை அழ வைத்தன. மனம், நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் என் மூலமும் அந்த வரலாற்று நாயகன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இப்படி ஒரு அற்புதமான படத்தை திரையுலகிற்கு கொடுத்ததற்காக அக்கினேனி ஃபேமிலியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்!’’ என்றார்.

‘மனம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நேரத்தில் நடிகர் நாகேஸ்வர ராவ் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து, இந்தியத் திரையுலகையே துக்கத்தில் ஆழ்த்தினார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;