விறுவிறு ‘டப்பிங்’கில் அஞ்சான்!

விறுவிறு ‘டப்பிங்’கில் அஞ்சான்!

செய்திகள் 28-May-2014 2:55 PM IST VRC கருத்துக்கள்

‘சிங்கம் 2’ படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், இசைக்கு யுவன் சங்கர் ராஜா, தயாரிப்புக்கு திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யுடிவி நிறுவனங்கள் என பெரும் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முடியும் கட்டத்தில் இருக்கிறது. இப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் துவங்கி விட்டது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த இரு வேடங்களுக்கு ஏற்றவாறு குரல் கொடுக்கும் (டப்பிங்) வேலையில் படு பிசியாக இயங்கி வருகிறார் சூர்யா! விரைவிலேயே படத்தின் ஆடியோவும் வெளியாக இருப்பதால் ஜெட் வேகம் பிடித்துள்ளது ‘அஞ்சான்’ பட வேலைகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;