ஜீ.வி.க்கு ஓ.கே. சொன்ன நயன்தாரா! அப்போ த்ரிஷா?

ஜீ.வி.க்கு ஓ.கே. சொன்ன நயன்தாரா! அப்போ த்ரிஷா?

செய்திகள் 28-May-2014 2:08 PM IST Chandru கருத்துக்கள்

‘பென்சில்’ படத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் ஜீ.வி.பிரகாஷ், அப்படம் முடிவதற்குள்ளாகவே ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். ரொம்பவும் வித்தியாசமான இந்த டைட்டிலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யச் சென்றபோது, சம்பந்தப்பட்ட இரண்டு நடிகைகளிடமும் ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட்’ வாங்கி வர வேண்டும் என்று கூறிவிட்டார்களாம். இதனால் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நயன்தாராவிடம் சென்று தன் படத்தின் கதையைக் கூறினாராம். முழுக்கதையையும் கேட்டு முடித்த நயன், தன் பெயரை அப்படத்தின் தலைப்பில் பயன்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதனையடுத்து விரைவில் த்ரிஷாவிடம் இதுகுறித்து பேசி சம்மதம் வாங்கிவிட்டால், ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ டைட்டில் உறுதியாகிவிடும் என இயக்குனர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்படத்தை ரிபெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;