விஜய் ஆன்டனியை சந்திக்க வேண்டுமா?

விஜய் ஆன்டனியை சந்திக்க வேண்டுமா?

செய்திகள் 28-May-2014 1:00 PM IST VRC கருத்துக்கள்

நான்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கிய இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி, அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘சலீம்’. என்.வி.நிர்மல்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. விஜய் ஆன்டனியே இசை அமைத்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அக்‌ஷா பர்தாசனி! விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படம் சம்பந்தமாக விஜய் ஆன்டனி ’சலீம் மீட் சலீம்’ என்று ஒரு புது விளம்பர யுக்தியை கையாண்டுள்ளார்! அதாவது, ’சலீம்’ என்ற பெயருடையவர்கள் salimmeetssalim@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பினால் அவர்களுக்கு விஜய் ஆன்டனியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;