பிரேம்ஜி அமரனின் முதல் படம்!

பிரேம்ஜி அமரனின் முதல் படம்!

செய்திகள் 28-May-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

நடிகர், இசை அமைப்பாளர், பாடகர் என பல முகங்களுடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். ஏற்கெனவே பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ள பிரேம்ஜி அமரன் தற்போது நாகா வெங்கடேஷ் இயக்கி வரும் ‘நாரதன்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நகுல், நிகிஷா பட்டேல் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ராதாரவி, மயில்சாமி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ‘‘இதுவரையில் நிறைய படங்களில் நடித்துள்ளேன், ஆனால் ராதா ரவி, மயில்சாமி ஆகியோருடன் இதுவரை நடித்ததில்லை. அவர்களுடன் இணைந்து நான் நடிக்கும் முதல் படம் நாரதன்’’ என்கிறார் பிரேம்ஜி அமரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் - டீசர்


;