‘ஆரண்யகாண்டம்’ பட இயக்குனருடன் வெற்றிபட நாயகன்!

‘ஆரண்யகாண்டம்’ பட இயக்குனருடன் வெற்றிபட நாயகன்!

செய்திகள் 28-May-2014 10:53 AM IST Top 10 கருத்துக்கள்

மலையாளத்தின் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஃபஹத் ஃபாசில் குறிப்பிடத்தக்கவர்! இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவர், மலையாளம் மற்றும் தமிழில் ஏராளமான வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஃபாசிலின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும்! மலையாளத்தின் இன்னொரு இளம் ஹீரோவான துல்கர் சல்மானை, இயக்குனர் பாலாஜி மோகன் தனது ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதைப்போல ஃபஹத் ஃபாசிலும் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. முதலில் இவரை வைத்து மணிரத்னம் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த புராஜெக்ட்டை தற்போதைக்கு தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஆரண்யகாண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா ஒரு அருமையான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி இருப்பதாகவும், அந்த ஸ்கிரிப்ட்டில் ஃபஹத் ஃபாசில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘ஆரண்யகாண்டம்’ ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று இரண்டு தேசிய விருதுகள் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;