பிரசாந்துடன் பிரபல பாலிவுட் நாயகி!

பிரசாந்துடன் பிரபல பாலிவுட் நாயகி!

செய்திகள் 27-May-2014 1:08 PM IST VRC கருத்துக்கள்

‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்களை தொடர்ந்து பிரசாந்த் நடித்து வரும் படம் ‘சாஹசம்’. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னை, மும்பை, டெல்லி என நடந்து முடிய, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் ஆகிய வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது. மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கிய மேஜர் ரவியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அருண்ராஜ் வர்மா இயக்கும் இப்படத்தில் வேலை தேடும் இளைஞராக நடிக்கிறார் பிரசாந்த்! இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார் என்றும், அந்த நடிகைக்கான தேர்வு தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது! இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஸ்பெஷல் டான்ஸ் ஒன்றில் பிரசாந்துடன் பாலிவுட்டின் பிரபல ஹீரோயின் நர்கிஸ் பக்ரி நடனம் ஆடவிருக்கிறார். தற்போது ‘ஸ்பை’ எனும் ஆங்கில படத்தில் நடித்து வரும் நர்கிஸ் பக்ரி, ஏற்கெனவே ரன்பீர் கபூருடன் ‘ராக் ஸ்டார்’, ஜான் ஆப்ரகாமுடன் ‘மெட்ராஸ் கஃபே’, ஷாஹித் கபூருடன் ‘படா போஸ்டர் நிக்லா ஹீரோ’ என பல ஹிந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்து, பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர். நர்கிஸ் பக்ரி நடிக்கும் முதல் தமிழ் படம் ‘சாஹசம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தனது ‘ஸ்டார் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேம்பு - சூப்பர் டீலக்ஸ்


;