மீண்டும் தொடங்கியது ‘இது நம்ம ஆளு’!

மீண்டும் தொடங்கியது ‘இது நம்ம ஆளு’!

செய்திகள் 27-May-2014 12:38 PM IST Top 10 கருத்துக்கள்

‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜின் இயக்கத்தில் ஒருசில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்படத்தின் முக்கியமான பல காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன்பிறகு சிம்பு ‘வாலு’ படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததால், ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு சிறிது இடைவெளிவிட்டார்.

தற்போது, ‘வாலு’ படத்தின் கடைசிப் பாடலை தாய்லாந்து சென்று முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார் சிம்பு. இதனால், மீண்டும் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பில் நயன்தாராவுடன் கலந்து கொண்டுள்ளாராம். தற்போது பாடல் காட்சி ஒன்றை சென்னையில் வைத்து படமாக்கி வருகிறார்களாம். அதோடு படப்பிடிப்பு முடிக்கப்பட்ட காட்சிகளுக்கு, கிடைக்கும் இடைவெளிகளில் அவ்வப்போது ‘டப்பிங்’ வேலைகளையும் முடித்துக் கொண்டே வருகிறார்களாம். ‘வாலு’ படம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருவதால், இப்பட ரிலீஸிற்குப் பிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார் சிம்புவின் தம்பி குறளரசன். அதோடு, இப்படத்தில் சூரியும் முதல்முறையாக சிம்புவுடன் இணைந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;