அஜித், சிம்பு… த்ரிஷாவின் அடுத்த ஜோடி?

அஜித், சிம்பு… த்ரிஷாவின் அடுத்த ஜோடி?

செய்திகள் 27-May-2014 12:21 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் ரஜினியை தவிர பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் த்ரிஷா! அதைப்போலவே தெலுங்கில் பாலகிருஷ்ணா தவிர்த்து தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்ககேஷ், பவன் கல்யாண், மகேஷ் பாபு, பிரபாஸ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷா, இதுவரையில் பாலாகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்ததில்லை. ஏற்கெனவே பாலகிருஷ்ணாவுடன் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்திருந்தபோதிலும், அப்போது வேறு படங்களில் த்ரிஷா பிசியாக இருந்ததால் அப்படங்களில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது சிம்பு படம், அஜித் படம் என தமிழில் பிசியாகியிருக்கும் த்ரிஷா, அடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இது த்ரிஷாவுக்கு பாலகிருஷ்ணாவுடனான முதல் படம்! இப்படத்தை புதுமுக இயக்குனர் சத்யதேவ் இயக்க, அவர் சென்னைக்கு வந்து த்ரிஷாவிடம் படத்தின் கதையை சொல்லியிருக்கிறார்! அந்தக் கதையும், அதில் தன்னோட கேரக்டரும் த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்துபோக உடனே அவர் ‘எஸ்’ சொல்லியிருக்கிறார்! இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது! சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘லெஜென்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;