‘கோச்சடையான்’ பற்றி என்ன சொல்றார் சிம்பு?

‘கோச்சடையான்’ பற்றி என்ன சொல்றார் சிம்பு?

செய்திகள் 27-May-2014 11:55 AM IST Chandru கருத்துக்கள்

சிம்பு சிறுவயதிலிருந்தே சூப்பர்ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர். அதனாலேயே அவரின் தந்தை டி.ஆர். தன் மகனுக்கு ‘லிட்டில் சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார். இப்போது சிம்பு வளர்ந்து ‘யங் சூப்பர்ஸ்டாரா’க மாறி ‘எஸ்.டி.ஆர்’ ஆக மாறிவிட்டார். ஆனாலும், அவர் இன்னமும் ரஜினியின் தீவிர ரசிகர்தான். தன் மனதில் பட்டதை ‘பட்’டென்று கொட்டிவிடும் வழக்கம்கொண்ட சிம்பு, ‘கோச்சடையான்’ படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

‘‘கோச்சடையான் பட்டையக் கௌப்பிருச்சு... இந்தப்படத்தை நான் ரொம்ப விரும்பிப் பார்த்தேன். தலைவர் கலக்கிட்டாரு! ஹாலிவுட் பட கிராபிக்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘கோச்சடையான்’ கிராபிக்ஸ் அதற்கு இணையாக இல்லை. ஆனாலும், இந்த அளவு சிறப்பாகச் செய்ததற்காக சௌந்தர்யா ஆர். அஸ்வினுக்கு தலை வணங்குகிறேன். அவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். ‘கோச்சடையான்’ படத்தைப் பொறுத்தவரை குறிப்பிடப்பட வேண்டியவர்களில் கே.எஸ்.ரவிகுமாரும், ஏ.ஆர்.ரஹ்மானும் முக்கியமானவர்கள். இவர்களின் ஆத்மார்த்தமான வேலை படமெங்கும் தெரிகிறது. ஆண்டனியும் திறமையாகச் செய்திருக்கிறார். வசனங்கள் சூப்பரோ சூப்பர்!’’ என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;