‘பாபா’ பஞ்ச் வசனத்தில், விக்ரமின் கவுன்ட்-டவுன்!

‘பாபா’ பஞ்ச் வசனத்தில், விக்ரமின் கவுன்ட்-டவுன்!

செய்திகள் 27-May-2014 10:56 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ‘கோலி சோடா’ படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதலில் இப்படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது! ஆனால் இதை தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை! இந்நிலையில் இப்படத்திற்கு ‘பத்து எண்றதுக்குள்ளே’ என்று ஒரு டைட்டிலும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்பை கேட்டதும், ‘பாபா’ படத்தில் ஒரு கத்தியை வைத்துக்கொண்டு, ‘பத்து எண்றதுக்குள்ளே..’ என்று ரஜினி பேசும் பவர்ஃபுல் பஞ்ச் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த தலைப்புகளில் இறுதியாக எந்த டைட்டிலை வைக்கப் போகிறார்கள் என்பது தயாரிப்பு தரப்பினருக்கே வெளிச்சம்! எது எப்படியோ, படத்தின் படப்பிடிப்பு துவங்கியதால் விரைவிலேயே அதிகாரபூர்வமான டைட்டில் அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்ப்போம்! இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ’ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;