‘கோச்சடையான்’ பற்றி மனம்திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

‘கோச்சடையான்’ பற்றி மனம்திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 27-May-2014 10:29 AM IST Chandru கருத்துக்கள்

2டி மற்றும் 3டி என ஆறு மொழிகளில், 3 நாட்களில் ரூபாய் 42 கோடிகளை வசூல் செய்து கோலிவுட்டையே வாய்பிளக்கச் செய்துள்ளது ‘கோச்சடையான்’. இப்படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்ததில் அவரின் பின்னணி இசை வெகு சிறப்பாக செயல்பட்டிருந்தது. கோச்சடையான் படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் கிடைத்துள்ள வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ஆர். அதில்....

‘‘பாடல்களை உருவாக்குவதற்கும், பின்னணி இசையமைப்பதற்கும் மிகவும் கஷ்டப்பட்ட படங்களில் ‘கோச்சடையானு’ம் ஒன்று. ஏனென்றால் இப்படத்தின் கதைக்கேற்பவும், மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாக்கபட்ட காட்சிகளுக்கேற்பவும் இசையமைப்பது சவாலாக இருந்தது. ஆனால் நாங்கள் திறம்பட எங்கள் வேலையைச் செய்துள்ளோம் என்பது படத்திற்கு கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிகிறது. கடைசிவரை இப்படத்திற்கு என்னுடன் முழுமூச்சுடன் உழைத்த என் டீமிற்கு எனது நன்றிகள். சூப்பர்ஸ்டார் படத்திற்காக வழக்கமாக உருவாக்கும் ‘மாஸ்’ பாடல்களை தவிர்த்துவிட்டு, புதிதாகவும், நுணுக்கமாகவும் சில முயற்சிகளை இப்படத்தின் ஆல்பத்திற்காக நாங்கள் உருவாக்கினோம். குறிப்பாக நடனங்களுக்கேற்ற வகையில் பாடல்களின் இசையை உருவாக்கினோம். ‘கோச்சடையான்’ ஆல்பத்திற்காக என்னால் முயன்ற அளவுக்கு சிறப்பாக வேலை செய்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் டெக்னாலஜி அனிமேஷன் படத்திற்கு ரசிகர்களாகிய நீங்கள் தந்த பேராதரவிற்கு நன்றி!’’ என்று உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டிருக்கிறார் ஆஸ்கர் நாயகன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;