முருகதாஸ் படத்தில் விக்ரம், சமந்தா!

முருகதாஸ் படத்தில் விக்ரம், சமந்தா!

செய்திகள் 26-May-2014 11:35 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்து முடித்த விகரம் அடுத்து விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அல்லவா! ‘இடம் மாறி இறங்கியவன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இது ஒரு ‘த்ரில்லர் ரோட் மூவி’ என்று கூறப்படுகிறது! இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. விஜய், சூர்யா என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தா, இப்படத்தின் மூலம் விக்ரமுக்கும் ஜோடியாகியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் ’ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ‘கோலி சோடா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;