விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறாரா ஆலியாபட்?

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறாரா ஆலியாபட்?

செய்திகள் 26-May-2014 11:20 AM IST VRC கருத்துக்கள்

‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய, ஜி.என்.ஆர்.குமரவேலன் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல திரைப்பட ஃபைனான்சியரும், தயாரிப்பாளருமான செயின் ராஜ் ஜெயின் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கான ஹீரோயின் வேட்டை இப்போது நடந்து வருகிறது! சமீபத்தில், இந்தப் படத்திற்காக மும்பை சென்ற இயக்குனர் குமரவேலன் பாலிவுட் நடிகை ஆலியாபட்டை சந்தித்து, கதையின் அவுட்லைனை சொன்னதாகவும், அந்த அவுட்லைன் ஆலியாவுக்கு பிடித்துவிட்டதாகவும், விக்ரம் பிரபுவுடன் நடிக்க அவர் ‘எஸ்’ சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை இந்திய எல்லையில் நடப்பது மாதிரியாம்! இதில் விக்ரம் பிரபு எல்லை பாதுகாப்பு அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;