மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்!

மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்!

செய்திகள் 26-May-2014 11:04 AM IST Chandru கருத்துக்கள்

குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு ஐஸ்வர்யா ராய் படங்கள் எதிலும் நடிக்காமல் திரையுலகை விட்டு விலகி இருந்தார். தற்போது அவரின் செல்ல மகள் ஆராத்யா வளர்ந்துவிட்டதால், மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறாராம் ஐஸ். மணிரத்னம் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதுவரை ஐஸ்வர்யா ராயின் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ‘கேன்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலி’ல் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் பலரின் புருவத்தையும் உயர வைத்தார். குழந்தை பேறுக்குப் பிறகு கொஞ்சம் குண்டாகத் தெரிந்த ஐஸ்வர்யா ராய், தற்போது ஸ்லிம்மாகி மீண்டும் பழைய ராயாக திரும்பியிருந்ததுதான் கேன்ஸிற்கு வந்த பல பிரபலங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, விழாவின் போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். அதோடு இன்னும் பெயரிடப்படாத இரண்டு ஹிந்திப் படங்களில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

ராயின் செகன்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட்...!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;