கார்த்தி பிறந்தநாளில் சமூக சேவை!

கார்த்தி பிறந்தநாளில் சமூக சேவை!

செய்திகள் 26-May-2014 10:11 AM IST VRC கருத்துக்கள்

நேற்று, (மே - 25) நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் விழா தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பாக கொண்டாடப் பட்டது. ரசிகர்கள் கோயில்களில் அர்ச்சனை, அரசு மருத்துவமனைகளுக்கு இரத்ததானம், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல், மரம் நடுதல், நலிந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு வகையான நிகழ்சிகளை அந்தந்த மாவட்ட தலைமை மன்றத்தின் மூலம் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சென்னை அரசு பொது மருத்தவமனை மற்றும் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில், வெளி ஊர்களில் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் குடும்பத்தினருக்கு படுக்க பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னை இந்திரா நகரில் இரத்ததான முகாம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் குழந்தைகள் இல்லத்திருக்கு, கல்விக்கு தேவையான நோட்புக், பேனா, பென்சில் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு, ஐஸ் கிரீம் வழங்கப்பபட்டன.

சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவில் அருகில் 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருவான்மியூர், மற்றும் மேடவாக்கத்தில் உள்ள காக்கும் கரங்கள் இல்லத்திற்கும், குரோம்பேட்டையில் உள்ள பாலா ஆஸ்ரமத்தினருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்டத் தலைவர் மயிலை M.K.B. சந்தோஷ் தலைமையில் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் காஞ்சி சரவணன் செய்திருந்தார். இந்நிகழ்வுகளில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் வியாசை நித்யா, ஆனந்தன், புரசை மதன், தேவா, ராக்கெட் ராஜா, திருவள்ளுவர் சங்கர், மாநில அமைப்பாளர் ப. செல்வம், ஒருங்கிணைப்பாளர் S.L. குமார் மன்ற காப்பாளர் R.A. ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடக, கேரளா, மும்பை உள்ளிட்ட அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடிகர் கார்த்தி பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;