வெற்றிகளின் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெற்றிகளின் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கட்டுரை 24-May-2014 9:00 PM IST Chandru கருத்துக்கள்

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்தின் வெற்றியால் பரவலான ரசிகர்களை பெற்றார். கடந்த சில வருடங்களில் 250 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் எது என்று தமிழ் சினிமாவை பின்னோக்கித் தேடத் தொடங்கினால் அனேகமாக அதற்கான விடை ‘பருத்திவீரனி’ல்தான் கிடைக்கும்.

இயக்குனராக வேண்டும் என்று ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் உதவி இயக்குனராக தமிழ்சினிமாவில் காலடி எடுத்து வைத்தவருக்கு, ‘பருத்திவீரன்’ தந்த வெற்றி அவரின் பாதையை மாற்றி அமைத்தது.

தனது முதல் படத்தின் மூலம் கிடைத்த புகழையும், வரவேற்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘நான் மகான் அல்ல’, ‘சிறுத்தை’ என வரிசையாக வெற்றிப் படங்களைத் தந்தார். அவரின் ஒருசில படங்கள் சரியாகப் போகவில்லை என்றாலும் தமிழிலும், தெலுங்கிலும் அவருக்கான எதிர்பார்ப்பும், ரசிகர் பட்டாளமும் கொஞ்சமும் குறையவில்லை. தன் மீது ரசிகர்களும், பட வியாபாரத் துறையைச் சேர்ந்தவர்களும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பதில் சொல்லும் விதமாக, கடந்த வருடம் வெளிவந்த ‘பிரியணி’ படத்தின் வெற்றியைக் கொடுத்தார்.

இப்போது ‘அட்டகத்தி’ இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் "மெட்ராஸ்" என்ற படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி ரசிகர்களுக்கான விருந்தாக வரவிருக்கிறது.

குழந்தைகள், பெண்கள், இளவட்டங்கள் முதல் சினிமாவை ரசிக்கும் தாத்தாக்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான நடிகர் என்ற அடையாளம் தமிழ்சினிமாவில் வெகு சிலருக்குத்தான் கிடைக்கும். அந்த வெகுசிலரில் கார்த்தியும் ஒருவர். வெற்றியின் நாயகன் கார்த்தி மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க ‘டாப் 10 சினிமா’ சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;