நலத்திட்ட பணிகளில் கார்த்தி ரசிகர் மன்றங்கள்!

நலத்திட்ட பணிகளில் கார்த்தி ரசிகர் மன்றங்கள்!

செய்திகள் 24-May-2014 4:14 PM IST Chandru கருத்துக்கள்

‘பருத்திவீரன்’ படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘நான் மகான் அல்ல’, ‘சிறுத்தை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து குறுகிய காலத்தில் புகழ்பெற்றவர் நடிகர் கார்த்தி. அதன் பிறகு ‘சகுனி’, ‘அலெக்ஸ்பாண்டியன்’, ‘அழகுராஜா’ ஆகிய படங்களிலும் நடித்தார். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

நாளை (மே 25) அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார்களாம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் ரத்த தானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவாம். குறிப்பாக சென்னையில் உள்ள ஆதரவற்றவோர் இல்லங்களுக்கு கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் அன்னதானம் வழங்க இருக்கிறார்களாம். அதோடு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையிலும் நலத்திட்ட உதவிகள் செய்ய இருப்பதாகவும் மன்ற நிர்வாகிகளிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கெனவே நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரின் ‘அகரம் பவுன்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் ஏழை மாணவ - மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;