‘ராஜா ராணி’ படத்துக்கு புதிய விருது!

‘ராஜா ராணி’ படத்துக்கு புதிய விருது!

செய்திகள் 24-May-2014 12:10 PM IST Chandru கருத்துக்கள்

ஷங்கரின் உதவி இயக்குனர் அட்லி இயக்கிய முதல் படமான ‘ராஜா ராணி’க்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் தமிழில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, தெலுங்கிலும் வெளிவந்து ஹிட்டானது. பெரிய அளவில் இப்படம் வசூலித்தது மட்டுமல்லாமல், 2013ஆம் ஆண்டிற்கான எடிசன் விருது வழங்கும் விழாவில், நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதையும், அட்லி சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ‘ராஜா ராணி’ படத்திற்காக பெற்றனர். அதோடு நார்வே தமிழ்த் திரைப்பட விருது விழாவில் ‘மிகவும் பிரபலமான படம்’ என்ற விருதையும் ‘ராஜா ராணி’ பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது, ரேடியோ மிர்ச்சி ‘கோலி சோடா சினி அவார்ட்ஸ்’ சார்பாக ரசிர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த படம் என்ற விருதை ‘ராஜா ராணி’ படத்திற்காக இயக்குனர் அட்லி பெற்றிருக்கிறார்.

வாழ்த்துக்கள் அட்லி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;