‘‘ஐ லவ் யூ சிம்பு!’’ - பிரேம்ஜி அமரன்

‘‘ஐ லவ் யூ சிம்பு!’’ - பிரேம்ஜி அமரன்

செய்திகள் 24-May-2014 11:44 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புவின் நெருங்கிய வட்டாரத்தில் எப்போதும் பிரேம்ஜிக்கு தனி இடம் உண்டு. ட்விட்டரில் இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியைப் படித்து ரசிப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படி சமீபத்தில் இவர்கள் பேசிக் கொண்ட விஷயங்கள்தான் இப்போது ‘ட்விட்டரில்’ செம கலாட்டா. அப்படி என்ன பேசிக் கொண்டார்கள் என்கிறீர்களா...?

‘வாலு’ படத்திற்காக தாய்லாந்து சென்று கடைசியாக ஒரு பாடல் காட்சியை படமாக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் சிம்பு. இதுகுறித்து அவர், ‘‘எப்பவும் வெளிநாட்டிலிருந்து கிளம்பும்போது என் கேர்ள் ஃபிரண்ட்டுக்காக டியூட்டி ஃப்ரீ ஷாப்பில் ஏதாவது வாங்கிச் செல்வது வழக்கம். இந்தமுறை எதையும் வாங்காமல் எல்லா ஷாப்களையும் கடந்து செல்கிறேன். இந்த ஃபீலிங் ரொம்பவும் வித்தியாசமா இருக்கு. இப்போ நான் சிங்கிள்!’’ என ட்வீட்டியிருக்கிறார்.

அதற்கு பிரேம்ஜி அமரன், ‘‘தலைவா எனக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்க....’’ என ஜாலியாக ரிப்ளை ட்வீட் செய்ய, ‘‘ஸாரி... நான் இப்போ விமானத்துல ஏறிட்டேன்... ஆனாலும் உனக்காக ஸ்பெஷலா ஒண்ணு வாங்கியிருக்கேன்... பப்ளிக்... பப்ளிக்!’’ என சிம்புவும் பதிலளிக்க, அது என்னவென்று தெரிந்த சந்தோஷத்தில் பிரேமஜியும், ‘‘தலைவா ஐ லவ் யூ...’’ என ட்வீட்டியிருக்கிறார்.

என்ன ரசிகர்களே... பிரேம்ஜிக்காக சிம்பு வாங்கியிருக்கும் அந்த ‘ஸ்பெஷல் ஒண்ணு’ என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

STR ‏@iam_str 15h
So used to shop in the airport duty free for my #girlfriend ... But walking passed all the shops feels different ... #single :)

Premgi amaren ‏@Premgiamaren 14h
@iam_str thalaiva get me something...

STR ‏@iam_str 11h
@Premgiamaren sorry already boarded the flight... but have something special for u.... public public lol...

Premgi amaren ‏@Premgiamaren 11h
@iam_str thalaiva I love you...

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;