‘‘எனக்கு கல்யாணமா?’’ - ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி

‘‘எனக்கு கல்யாணமா?’’ - ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி

செய்திகள் 24-May-2014 10:59 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களாக இணையதளமெங்கும் தன்னைப் பற்றி வெளிவந்த திருமண செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ‘சுப்ரமணியபுரம்’ மூலம் தமிழில் அறிமுகமான சுவாதி.

சுவாதி தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் ‘கார்த்திகேயா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையைச் சேர்ந்த பிசின்ஸ்மேன் ஒருவரை சுவாதி திருமணம் செய்யவிருக்கிறார் என்று மீடியாக்கள் பலவற்றில் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளைப் படித்துவிட்டு, உண்மை என நம்பி பலரும் சுவாதிக்கு இதுகுறித்து போனில் விசாரிக்க, அவரே இதற்கு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். ‘‘என்னைப் பற்றி வரும் திருமண செய்திகளைப் படிப்பதற்கும் கேட்பதற்கும் ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், இதில் துளிகூட உண்மையில்லை. நான் திருமணம் செய்வதற்காக இதுவரை எந்த யாரையும் பார்க்கவும் இல்லை, அதுகுறித்து பேசவும் இல்லை. இதோடு இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார் சுவாதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சச்சினை அவதூறாக பேசிய RJ பாலாஜி - வீடியோ


;