அஜித் பார்க்கத் துடிக்கும் படம்!

அஜித் பார்க்கத் துடிக்கும் படம்!

செய்திகள் 24-May-2014 10:44 AM IST Chandru கருத்துக்கள்

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்திற்கும் ‘தல’ அஜித்திற்கும் திரையுலகைத் தாண்டிய நட்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தன்னுடைய ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க அனுமதி கேட்டபோது, சந்தோஷமாக உடனே ஒப்புக்கொண்டார் ரஜினி. அதேபோல் ரஜினியைப் போலவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் அஜித். இந்த ஆர்வம் தனக்கு வரக் காரணமானவர் ரஜினிதான் என அஜித்தே குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் எப்போது அஜித் படம் வந்தாலும், அதைப் பார்த்துவிட்டு அவருக்கு போன் செய்து வாழ்த்துவது ரஜினியின் வழக்கம். அஜித்தும் அப்படித்தான்.

நேற்று வெளியான ‘கோச்சடையான்’ படத்திற்கு உலகமெங்கும் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கௌதம் மேனனும், அஜித்தும் ‘கோச்சடையான்’ படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும், இன்றோ அல்லது நாளையோ அவர்கள் ‘கோச்சடையான்’ படத்தைப் பார்க்க தியேட்டருக்கு திடீர் விசிட் அடிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

எதுக்கும் ‘கோச்சடையான்’ படம் பார்க்கும்போது திரும்பி ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள் ரசிகர்களே... உங்களுக்குப் பின்னாடி உட்கார்ந்திருப்பது ‘தல’யாகக்கூட இருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;