பி.பி.சி.யிலும் இடம்பெறப் போகும் பாஹுபலி!

பி.பி.சி.யிலும் இடம்பெறப் போகும் பாஹுபலி!

செய்திகள் 23-May-2014 2:45 PM IST VRC கருத்துக்கள்

‘நான் ஈ’ எனும் மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ராஜமௌலி! இவர் தற்போது இயக்கி வரும் பிரம்மாண்ட படம் ‘பாஹுபலி’. இந்திய சினிமா சரித்திரத்திலேயே அதிக பொருட் செலவில் தயாராகும் படம் ‘பாஹுபலி’ என்று கூறப்படுகிறது! இந்தப் படம் மூலம் இயக்குனர் ராஜமௌலி உலக அளவிலும் பேசப்படவிருக்கிறார். இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்திய சினிமா குறித்து உலக புகழ்பெற்ற பி.பி.சி. நிறுவனம் ஒரு டாகுமென்டரியை தயாரிக்கிறது. பி.பி.சி.க்காக சஞ்சீவ் பாஸ்கர் என்பவர் தயாரித்து வரும் இந்த டாகுமென்டரியில் ‘பாஹுபலி’ படக்குழுவினர் பலரது பேட்டிகள் இடம்பெறவிருக்கிறது. இதை பி.பி.சி. நிறுவனம் உலக அளவில் ஒளிபரப்பவிருப்பதால் ‘பாஹுபலி’ படம் உலக அளவில் பேசப்படவிருக்கிறது.

‘பாஹுபலி’ படத்தின் முக்கிய கேரக்டர்களில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு கீரவாணி இசை அமைக்கிறார். சாபு சிரிலின் பிரம்மாண்ட அரங்க அமைப்புகள், அந்த பிரம்மாண்டங்களை அதிரடியாக படம் பிடிக்கும் செந்திலின் ஒளிப்பதிவு என இந்திய சினிமாவை உலகம் திரும்பி பார்க்கும் விதமாக இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;