‘மதுரை சம்பவம்’ இயக்குனரின் அடுத்த படம்!

‘மதுரை சம்பவம்’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 23-May-2014 1:02 PM IST VRC கருத்துக்கள்

‘மதுரை சம்பவம்’, விரைவில் வெளியாகவிருக்கும் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யூரேகா அடுத்து இயக்கியுள்ள படம் ‘தொப்பி’. தமிழகத்தில் பல இடங்களில் காவலர்களை குறிப்பிடும்போது ‘தொப்பி’ என்று சொல்வதுண்டு! இப்படி அழைப்பதை சில போலீஸ்காரர்களும் பெருமையாக நினைப்பதுண்டு! குற்றப் பின்னணி மற்றும் கலாச்சாரப் பின்னணியில் இருக்கும் ஒரு இளைஞன் காவலனாக வரவேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறார். அந்த இளைஞனின் கதையை சொல்லும் படமாம் ‘தொப்பி’. இப்படத்தை குரங்கணி காட்டின் பசுமையான பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுத, ராம்பிரசாத் சுந்தர் இசை அமைத்திருக்கிறார். ‘மைனா’ பட புகழ் சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை ‘ராயல் ஸ்கிரீன்ஸ்’ எனும் நிறுவனத்தின் சார்பில் எஸ்.பரமராஜ் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தினை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;