50-ஐ தொட்ட சிவகார்த்திகேயன்!

Over 50 days for Maan Karate

செய்திகள் 23-May-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, அனிருத் இசை அமைக்க, திருக்குமரன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி இன்று 50-ஆவது நாளை தொட்டுள்ளது. ‘மெரினா’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகர்! தொடர் வெற்றிகளை குவித்து வரும் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் சாதனையை முறியடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;