‘கோச்சடையான்’ - ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

‘கோச்சடையான்’ - ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

செய்திகள் 23-May-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்து வந்த ரஜினியின் ‘கோச்சடையான்’ திரைப்படம் இன்று ஒரு வழியாக ரிலீசாகி விட்டது. இந்தப் படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான் செய்தி! அதாவது, இந்தப் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களிடமிருந்து கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முத்தையா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த வழக்கில், ‘‘தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் திரைப்படம், பெரும்பாலான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படம், தமிழில் பெயர் வைத்துள்ள படங்களுக்கு 2011 அரசாணையின் படி கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது. அரசிடம் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வரியை வசூலிப்பதாகவும், இந்த விவகாரத்தில் மோசடி நடப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமனறம் விசாரித்து, திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கும் அரசாணைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உத்தரவிட்டது. எனவே ‘செனாலிராமன்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து ‘தெனாலிராமன்’ பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில், வரி விலக்கு குறித்து அரசு ஏதாவது ஒரு முடிவை எடுத்தால் அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும் என்று கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி ஐகோர்ட் உத்தரவிட்டது. வரி விலக்கு பெறாமலேயே ‘தெனாலிராமன்’, ‘என்னனோ ஏதோ’ ஆகிய படங்கள் வெளியாகி விட்டது.
இந்நிலையில் தமிழக ஆரசு ‘கோச்சடையான்’ படத்துக்கு வரி விலக்கு அளித்து கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டது. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். ‘தெனாலிராமன்’ படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் இந்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி மூன்றாவது நபர் லாபம் அடையும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து, தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு மிகப் பெரிய இழப்பை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். எனவே ‘கோச்சடையான்’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து, நீதிபதிகள் அளித்துள்ள இடைக்கால உத்தரவில், ‘‘கோச்சடையான்’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். திரையரங்கு உரிமையாளர்கள், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக் கூடாது. கேளிக்கை வரி சேர்க்காமல் அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த வழக்கில் திரையரங்கு உரிமையாளர்களை எதிர்மனுதாரராக சேரக்க வேண்டும். உயர்நீதி மன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த வழக்கை சேர்த்து விசாரிக்க உத்தரவிடுகிறோம்’’ இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;