சோனாக்ஷியின் குதிரையேற்றம் ‘லிங்கா’வுக்காகவா?

சோனாக்ஷியின் குதிரையேற்றம் ‘லிங்கா’வுக்காகவா?

செய்திகள் 22-May-2014 3:23 PM IST Top 10 கருத்துக்கள்

சோனாக்ஷி சின்ஹா குதிரையில் செல்வது போன்ற போட்டோவும், வீடியோவும்தான் தற்போது இணையதளங்களில் செம ஹிட். இந்த போட்டோவைப் பார்த்த நம்மூர் மீடியாக்களில் சில, ரஜினியின் ‘லிங்கா’ படத்திற்காகத்தான் சோனாக்ஷி சின்ஹா குதிரையேற்றப் பயற்சி எடுத்து வருகிறார் என செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், உண்மை நிலவரம் வேறு!

அமித் சர்மா இயக்கத்தில் அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக ‘டேவர்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது, குதிரை ஓட்ட வேண்டும் என்ற தனது ஆசையை படக்குழுவினருக்கு தெரிவித்திருக்கிறார் சோனாக்ஷி. அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குதிரையும் வரவழைக்கப்பட்டு அம்மணியையும் அதில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அவரும் தைரியமாக அந்த குதிரை மேல் ஏறி, படப்பிடிப்புத் தளத்தை வலம் வர, அதை அப்படியே போட்டோ, வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்டு படத்திற்கு இப்போதே பப்ளிசிட்டி வேலையை ஆரம்பித்து வைத்துவிட்டதாம் ‘டேவர்’ டீம்! மற்றபடி ரஜினியின் ‘லிங்கா’ படத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்!

எப்படியெல்லாம் ‘லிங்க்’ பண்றாங்கப்பா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;