கார் விபத்தில் சிக்கிய நாசர் மகன்!

கார் விபத்தில் சிக்கிய நாசர் மகன்!

செய்திகள் 22-May-2014 12:39 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் நாசரின் மகன் ஃபைசல் இன்று காலை தனது நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது இவரது கார் ஒரு பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ஃபைசலுடன் காரில் பயணித்த அவரது நண்பர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. ஃபைசலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஃபைசல் சீக்கிரம் குணம் அடைய நாம் பிரார்த்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ


;