சிவகார்திகேயனுடன் நடிப்பேன்! - சந்தானம்

சிவகார்திகேயனுடன் நடிப்பேன்! - சந்தானம்

செய்திகள் 22-May-2014 12:14 PM IST Top 10 கருத்துக்கள்

சந்தானம், முழுநீள ஹீரோவாக நடித்த படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ரசிகர்கள் தந்த ஆதரவினால் இப்படம் பட்டி, தொட்டியெங்கும் வெற்றி பெற்றுள்ளது. விநியோகஸ்தர்கள் தெரிவிக்கும் வியாபார லாப புள்ளி விவரங்களைக் கேட்டு சந்தோஷப்பட்டு வருகிறார் சந்தானம். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வெற்றிக் கூட்டத்தில் கலந்துகொண்டு சந்தானம் பேசியபோது,

‘‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்துடனும், ‘நண்பேன்டா’ படத்தில் உதயநிதியுடனும் நடித்து முடித்த பிறகு, என்னுடன் ‘லொள்ளு சபா’ பண்ணிய எனது நண்பர் முருகானந்தம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளேன். ஆஸ்னா சவேரி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் இருவருக்கும் ஏற்ற நல்ல கதையாக இருந்தால் சேர்ந்து நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை’’ என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;